ம. ரமேஷ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ம. ரமேஷ்
இடம்:  வேலூர்
பிறந்த தேதி :  09-Sep-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jul-2011
பார்த்தவர்கள்:  883
புள்ளி:  448

என்னைப் பற்றி...

ஆர்வம் :கவிதை எழுதுதல்
கவிதை வடிவங்கள்: ஹைக்கூ, சென்ரியு, விமரைக்கூ, ஹைபுன், குறட்கூ, சீர்க்கூ, கஸல் (என்னுடைய கவிதைகள் மெய்யியல், அழகியல், சமூகவியல், கவித்துவம், தத்துவம் போன்றவற்றோடு இயங்கக்கூடியது). என்னுடைய படைப்புகளைக் காண: www.rameshpoet.blogspot.com
www.kaviaruviramesh.com
poetramesh@gmail.com
www.facebook.com/ramesh.phd

என் படைப்புகள்
ம. ரமேஷ் செய்திகள்
ம. ரமேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Sep-2015 10:22 am

தங்கள் ஹைக்கூக்களை வேறொரு பரிமாணத்திற்கு இட்டுச் செல்ல ஒரு முயற்சி...
4 காலங்களின் பகுப்புகளில் தங்கள் கவிதைகளை எழுத இந்தப் பகுதி வழிநடத்தும்...

ஹைக்கூவில் எப்போதும் ஒரு பருவ வார்த்தை இருக்கும். அவ்வார்த்தை கவிதையின் சூழலைப் புலப்படுத்தும். அது ஒரு விதையாக, உணர்ச்சி உலகின் விசையாக, ஒலி, வாசனை, நிறம் இவைகளாக இருக்கும். இவ்வாறு சுருங்கச் சொல்லப்பட்ட ஒன்றின் உருவம், நாம் நிலவு எனக் கூறும்போது, இலையுதிர் கால முழுமதியைக் குறிக்கிறது. வசந்த காலத்தைக் குறிக்க மங்களான நிலவு, மழைக்காலத்தில் குளிர் நிலவு என வரும் (முனைவர் மித்ரா, ஜப்பானிய, தமிழ் ஹைக்கூக்கள், ப.16). ஹைக்கூ ஒரு காலத்தில் பருவங்களுக்க

மேலும்

ம. ரமேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2014 6:56 am

ஐயப்ப பக்தர்கள்
தினம் உறங்கி எழுகிறார்கள்.
பிள்ளையார் கோயிலில்!
முதல் இரண்டு அடிகளைப் படிக்கும்போது ஐயப்ப பக்தர்கள், தினம் உறங்கி எழுகிறார்கள் என்பதில் என்ன செய்தி இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனாலும், இருக்கத்தான் செய்கிறது. தப்பு என்று நாம் நினைக்கும் செயல்களை செய்யாதவர்களாக ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்துகொண்டு இருக்கும்போது இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அந்தப் பக்தர்கள் எவ்வாறு, எப்படி, எந்த மனநினைவில், மகிழ்ச்சியில், துன்பத்தில் எழுகிறார்கள் என்று முதலிரண்டு அடிகள் விரியும். மூன்றாவது அடியைப் படிக்கிறோம். பிள்ளையார் கோயில் என்று இருக்கிறது. என்ன வியப்பு பாருங்கள்.

மேலும்

ம. ரமேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2014 6:53 am

நடுங்கிக் கொண்டு
ரசிக்கிறான்.
பனித்துளிகளை

முதலிரண்டு அடிகளில் எதையோ, எங்கோ, தனிமையில் திருட்டுத்தனமாக ரசிக்கிறான். அதனால் அவன் நடுங்கிக் கொண்டு இருக்கிறான் என்று பொருள் விரிகிறது. மூன்றாம் அடியில் பனித்துளியை ரசிக்கிறான் என்றிருப்பதால் நாம் அவனை ரசிக்க வேண்டியதாகிவிடுகிறது. நடுங்கும் குளிரில் அவனுக்கு அப்படி ஏன் பனித்துளிகளை வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதோ? அதற்காக வருந்துவதா? நாம் ரசிக்க மறந்ததை அவன் ரசிப்பதற்காக நாம் ஹைக்கூவை ரசிப்பதா?

நடுங்கிக் கொண்டு
ரசிக்கிறான்.
பனித்துளிகளை
- கவியருவி ம.ரமேஷ்

மேலும்

TP தனேஷ் அளித்த படைப்பில் (public) Shyamala Rajasekar மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Sep-2014 12:49 pm

என்னுடைய
கற்பனைக்குதிரைக்கு
கடிவாளம் இட்டாள் - என்
காதலி ....!

என் துன்பங்களை மறக்கடித்தாள்
இன்பங்களை தனக்குள்ளே எடுத்துக்கொண்டாள்
கற்பனைகள் - அது
அவள் என்னுடன் இல்லாத நேரத்தில்தான்
அதுகும் அவளைப்பற்றித்தான்.!

காதலிக்கமுடிகிறது ஆனால்
கவிதை எழுதமுடிவதில்லை
காரணம் !!!...
மனதில் நின்றகவிதை இன்று
மனித வடிவில் என்னுடன்...!

மேலும்

மிக்க மகிழ்ச்சி நன்றி தோழமையே ! 14-Jan-2015 7:38 pm
மிக்க மகிழ்ச்சி நன்றி தோழமையே ! 14-Jan-2015 7:38 pm
கவிதை கிடைத்தபின் கருத்து எதற்கு? கவிதையை எழுத்துப்பிழை(கவலை) இன்றி பார்த்துக்கொள்ளுங்கள்.. வாழ்த்துக்கள்.... கவிதைக்கும் கவிதைக்கும் 28-Nov-2014 10:03 pm
கவிதையோடு வாழும் நீர் கொடுத்து வைத்தவர் 27-Oct-2014 4:43 pm
ம. ரமேஷ் - ம. ரமேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Sep-2014 7:02 am

‘நல்லாவே இருக்க மாட்டே…’
மண்னெடுத்து தூற்றினாள்!
குழந்தையோடு திரும்பும் மகள்.

யார்? மண் எடுத்து, எதற்காக? எப்போது? ஏன்? யாரை? தூற்றினார் என்பது தெரியவில்லை. ஏதோ ஒரு கோபம், சாபத்தைக் கொடுத்துள்ளது. மண் எடுத்து தூற்றினாள் – வயிறு எரிந்து சாபம் கொடுத்தால் நடந்துவிடுமா என்ன? மூன்றாவது அடியில் அந்த சாபம் நடந்துவிட்டு இருப்பது வருத்தம்தான். மூன்றாம் அடியில் படிக்கையில்தான் தெரிகிறது – தாய்தான் மகளுக்குச் சாபம் கொடுத்துள்ளாள். தான் விரும்பியவனோடு வாழ (சொல்லியோ, சொல்லாமலோ) சென்றுவிட்டதைக் காட்டுகிறது. அவள் நன்றாக வாழ்ந்து இருந்திருந்தால் பரவாயில்லை. குழந்தையோடு வீடு திரும்புகிறாள். பாவம். அவன்,

மேலும்

திருத்திக்கொள்கிறேன்.. நன்றி 08-Sep-2014 5:53 pm
மண்னெடுத்து அல்ல. 'மண்ணெடுத்து' 08-Sep-2014 3:35 pm
ம. ரமேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2014 7:02 am

‘நல்லாவே இருக்க மாட்டே…’
மண்னெடுத்து தூற்றினாள்!
குழந்தையோடு திரும்பும் மகள்.

யார்? மண் எடுத்து, எதற்காக? எப்போது? ஏன்? யாரை? தூற்றினார் என்பது தெரியவில்லை. ஏதோ ஒரு கோபம், சாபத்தைக் கொடுத்துள்ளது. மண் எடுத்து தூற்றினாள் – வயிறு எரிந்து சாபம் கொடுத்தால் நடந்துவிடுமா என்ன? மூன்றாவது அடியில் அந்த சாபம் நடந்துவிட்டு இருப்பது வருத்தம்தான். மூன்றாம் அடியில் படிக்கையில்தான் தெரிகிறது – தாய்தான் மகளுக்குச் சாபம் கொடுத்துள்ளாள். தான் விரும்பியவனோடு வாழ (சொல்லியோ, சொல்லாமலோ) சென்றுவிட்டதைக் காட்டுகிறது. அவள் நன்றாக வாழ்ந்து இருந்திருந்தால் பரவாயில்லை. குழந்தையோடு வீடு திரும்புகிறாள். பாவம். அவன்,

மேலும்

திருத்திக்கொள்கிறேன்.. நன்றி 08-Sep-2014 5:53 pm
மண்னெடுத்து அல்ல. 'மண்ணெடுத்து' 08-Sep-2014 3:35 pm
ம. ரமேஷ் - ம. ரமேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-May-2014 12:37 pm

குளிர்காலத்தில் நாம் பகல்பொழுதிலேயே தண்ணீரில் குளிக்க கஷ்டப்படுவோம். அதுவும் இந்த ஐயப்ப பக்தர்கள் விடியற்காலையில் கிராமப்புறங்களில் குளத்தில் குளிப்பதைப் பார்த்திருக்கிறேன். எப்படித்தான் குளிக்க முடிகிறதோ தெரியவில்லை. அதை வைத்துதான் இந்த ஹைக்கூ பிறந்திருக்கிறது. குளத்தில் இருக்கும் தண்ணீர் விடியற்காலையில் வெதுவெதுப்பாகத்தான் இருக்குமாம். சரி குளிர் காலத்தில்தானே பனியும் வருகிறது. அதனால்,

மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்

என்று முதலிரண்டு அடிகளை எழுதி முடித்து மூன்றாம் அடியில் “ஐயப்ப பக்தர்கள்” என்று எழுதலாம் என்று நினைத்து எழுதினேன்.

மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
ஐயப்ப பக்தர்

மேலும்

மகிழ்ச்சி நண்பரே... படித்து கருத்துரைத்தமைக்கு... 12-May-2014 1:09 pm
எடுத்துகாட்டுடன் விளக்கிய விதம் அருமை தோழரே 12-May-2014 1:06 pm
ம. ரமேஷ் - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-May-2014 2:51 am

வாருங்கள் இளைஞர்களே..!

நீண்ட நாட்களாக மனத்துள் தேங்கி கிடந்த ஒரு எண்ணத்தை செயல்படுத்தும் நோக்கில் இந்த புதிய முயற்சியை தொடங்குகிறேன் !

இந்த முயற்சியில் சமகால கவிஞர்களின் கவிதைகளும் அவை பேசும் கருத்துகளும் பற்றி கொஞ்சம் விரிவாக பேசுவதில் என் சிந்தையை புகுத்துகிறேன்...

அந்தவகையில் தளத்தில் நுழையும் ஒரு புது படைப்பாளி எழுதிய புதிய படைப்பொன்றை எடுத்துக் கொண்டால் எனக்கும் இலகுவாக இருக்கும் என்பதால் "வாருங்கள் இளைஞர்களே" என்ற தலைப்பில் ஒரு துடிப்பான, சமூக ஆர்வமிக்க இளைஞரின் பதிவை எடுத்துக் கொள்கிறேன் !
======================

வாருங்கள் இளைஞர்களே....

அருமையான தலைப்பு !

முதல் படைப்

மேலும்

அபி சார்..... வெளிப்படையாய் இங்கே விமர்சனம் எழுதினால் என்ன நடக்கும் .............? எல்லாமே நடக்கும் !!! ஹஹஹ ! நல்ல விமர்சனம் என்று நீங்கள் ஏற்றுக் கொண்டதால் இப்படியான விமர்சனங்களை தொடரப் போகிறேன் ! விமர்சனம் குறித்த விமர்சனத்தையும் நீங்கள் கருத்துகளில் பகிர்ந்துக் கொள்ளுங்கள் ! 14-May-2014 8:47 pm
"இந்தப் படைப்பாளி..?.. முதன்முதலாய் இந்தத் தளத்திற்குள் நுழைந்தபோது.." அப்பாடா..இதனைக் கண்டுகொள்ளவே இரண்டு வருடத்திற்க்கும் மேலாகிவிட்டது..,எனில், இவரது பணியில் இன்னும் கோளாறு நிறைய இருக்கிறது.வேகம் போதாது. இவர் இன்னும் சிறப்பாக எழுத முயற்சிக்க வேண்டும் என்பது புரிகிறது..! என்ன ஒரு குறையெனில்..இதுபோன்ற விமர்சனங்கள் அப்போதே இந்தப் படைப்பாளியை செதுக்கியிருந்தால்.கழிந்து போன இந்த இரண்டு வருடங்களையும் இப்போது சபித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. கலையின் விமர்சனம் ஆழ..அகல ..உழுதிருக்கிறது..! ஒரு படைப்பாளி என்ற நிலையில் இருந்து சற்று எட்ட நின்று பார்த்தால்..,இந்த விமர்சனம்,படைப்பாளிக்கு மிகத் தேவையான விஷயங்களை உள்ளடக்கி வழிகாட்டுகிறது..! "சமையலில் கொஞ்சம் சுவையூட்டிகள் சேர்த்துக் கொள்வதைப் போல (சத்திற்குப் பாதிப்பிலாமல்) கவிதைக்கு கொஞ்சம் இலக்கிய அலங்காரங்கள் காட்டாயம் தேவை ! "--- உண்மைதான்..! இனி எழுதுவதில் சற்று கவனத்தை இவர் வைத்துக் கொள்ளவேண்டும். நல்ல விமர்சனம் எழுதிய கலைக்கு நன்றி..! இன்னும் நிறைய விமர்சனங்களைத் தொடர்ந்து எழுதுங்கள்..! வாழ்த்துக்கள்..!! 12-May-2014 1:35 pm
நிச்சயமாக. அதையே தான் அய்யா நானும் சொல்லி இருக்கிறேன் ! இளைஞர்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை உண்டாகும் சக்தி இந்த எழுத்துகளுக்கு உண்டு ! அந்த எழுத்துகளை இளைஞர்கள் மத்தியில் கடத்துவதே என் இந்த பணியின் நோக்கம் ! மிக்க நன்றி அய்யா கருத்திற்கு ! 11-May-2014 6:38 pm
மிக்க நன்றி அண்ணா தங்களின் ஊக்குவிப்பிற்கு ! வரலாற்று மேற்கோள்களைச் சுட்டிக் காட்டி மிக அருமையான கோணத்தில் தங்களின் கருத்தை முன்வைத்திருக்கிறீர்கள் ! நாங்கள் மறந்துவிட்ட எத்தனையோ துணிகர புரட்சிகள் இருக்கிறது..அதில் நீங்கள் சுட்டிக் காட்டிய வரலாற்று குறிப்புகள் மறக்கவே கூடாத சம்பவங்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை ! மாவா பற்றி தெரிந்து வைத்திருக்கும் இன்றைய இளைய தலைமுறைகளில் எத்தனைப் பேர் மாவோ பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகிப் போய்விட்டது ! அபி சாரின் இந்த படைப்பு போல இன்னும் ஏராளமான படைப்புகள் இந்தக் கவிதைக் குவியலில் காணாமல் போய் கிடக்கிறது என்பதை அறிவீர்கள் ! மெல்ல மெல்ல அவற்றுக்கு முகவரி கொடுப்போம் என்பது தான் என்னுடைய இந்த முயற்சியாக இருக்கிறது ! பலரதும் படைப்புகளை எடுத்து இப்படி பேசுவதே எனது எண்ணம் ! தொடர்வேன் அண்ணா....! மிக்க நன்றி தங்களின் அருமையான கருத்திற்கு ! 11-May-2014 6:35 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
kavingharvedha

kavingharvedha

madurai
TP தனேஷ்

TP தனேஷ்

Suthumalai .Jaffna .
கே-எஸ்-கலைஞானகுமார்

கே-எஸ்-கலைஞானகுமார்

இலங்கை (கொஸ்லந்தை)

இவர் பின்தொடர்பவர்கள் (16)

Vicky Vandiperiyar

Vicky Vandiperiyar

திருவனந்தபுரம்
கே-எஸ்-கலைஞானகுமார்

கே-எஸ்-கலைஞானகுமார்

இலங்கை (கொஸ்லந்தை)
user photo

இவரை பின்தொடர்பவர்கள் (16)

Vicky Vandiperiyar

Vicky Vandiperiyar

திருவனந்தபுரம்
user photo

springsiva

springsiva

DELHI
மேலே